
கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணியில் உருவாயிருக்கும் படம் காப்பான்.
தமிழ் புத்தாண்டன்று வெளியான இப்படத்தின் டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா நடிக்கின்றனர். மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.மேலும் உமா ரியாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
இந்நிலையில் அண்மையில் சாயிஷா சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் படமாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். திருமணம் செய்துகொண்ட சாயிஷா அதன் பிறகு நடிக்கும் முதல் படம் காப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]