
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
அண்மையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இணைந்து போராடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது மீண்டும் புகார் அளித்துள்ளார்.குடிபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியின் உறவினர் கோபி மீதும் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுப்பிரமணி ஏற்கனவே பாலியல் புகாரில் ஹைதராபாத் போலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel