பிரபல நடிகரான ஆர்யா, தனது காதலியும் கஜினிகாந்த படத்தின் நாயகியு மான சயிஷா சைகல்-ஐ திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு விட்டதாகவும் மார்ச் 9ந்தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாகவும், இளைஞிகளின் மனம் கவர்ந்த நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் வயதையொட்ட நடிகர்கள் எல்லாம் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் இணைந்துவிட்ட நிலையில், நடிகர் விஷாலுக்கும் விரைவில் திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்ட விட்டது.
இந்த நிலையில், நடிகர் ஆர்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்து, தனக்கு பிடித்த இளம்நாயகியான சயிஷா சைகல்-ஐ லவ்வத்தொடங்கினார். இருவருக்கும் இடையே லவ் ஒர்க்அவுட் ஆகியுள்ள நிலையில், இரு ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தில் இருந்தும் பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதையடுத்து விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சி மூலம், தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்வதாக கூறி, பல பெண்களுடன் ஜொல்லு விட்ட ஆர்யா, அவர்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு, தற்போது சயிஷா சைகல்-ஐ திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஆர்யாவுக்கும் சயிஷா சைகலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும், இருவருக்கும் மார்ச் மாதம் 9ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆர்யா திருமணம் செய்ய உள்ள சாயிஷா, பிரபல இந்தி நடிகர் திலிப்குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.