சென்னை:
தமிழகத்தில் சென்னை, கோவை மாநரங்களில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வந்த பிரபலமான ரேவதி சூப்பர் மார்கெட், நகைக்கடை, பர்னிச்சர் கடை, பாத்திரக்கடை, துணிக்கடை, பாடி சரவணா ஸ்டோர்ஸ் உள்பட ஜி ஸ்கொயர் நிறுவனம், லோட்டஸ் குழுமம் மற்றும் சிறு சிறு நிறுவனங்கள் உள்பட சென்னையில் சுமார் 72 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதுபோல கோவையில் 2 வணிக நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 74 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
chennai and kovai 74 places it-raids including perambur revathi stores