டில்லி:

கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல்

ஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான கொட நாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. கேரளாவை சேர்ந்த நபர்கள் எஸ்டேட்டில் புகுந்து அங்குள்ள ஆவணங்களை திருடியதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி கொல்லப் பட்டடார். அதைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் பலர் விபத்து மற்றும் பல வகைகளில் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து புலனாய்வு செய்த தெகல்ஹா இணையதள பத்திரிகையாளரான முன்னாள் செய்தியாளர்  மேத்யூஸ் சாமூவேல் பரபரப்பான வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். அதில், இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு பின்னணி யாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததாகவும், அப்போது கைப்பற்ற ஆவணங்களை கொண்டே கடைசியை கைக்குள் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்த கொலையில் தொடர்புடைய  சயான் மற்றும் மனோஜ் தன்னிடம் வாக்கு மூலம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக தலை வர் ஸ்டாலின் இதுகுறித்து விசாரணை கமிஷன் அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதுபோல எதிர்க்கட்சியின ரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்மீது திட்டமிட்டே இந்த பழி சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்புலம் யாரோ உள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுஇருப்பதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்துகாவல்துறை இதுதொடர்பாக  மேத்யூஸ் சாமுவேல் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில், டில்லியில் உள்ள பத்திரிகையாளர் சாமுவேலை கைது செய்ய தமிழக போலீசார் டில்லி வந்திருப்பதாகவும்,  அவர்ககள் என் வீட்டை நோட்ட மிட்டு வருகிறார்கள், மேலும் இது தொடர்பாக  சயான் மற்றும் வயலார் மனோஜை கைது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனக்கு சென்னை மற்றும் டில்லி ஊடக நண்பர்கள் தகவல் கொடுத் துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக எந்தவொரு முதலமைச்சரும் நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்டிருக்காத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கொடநாடு எஸ்டேட் தொடர்பாக  5 பேர் ரகசியமாக கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் எடப்பாடி தான் இருக்கிறார் என்று மீண்டும் தெளிவு படுத்தி உள்ளார்.

செய்தியாளர் மேத்யூசின் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில்,   டில்லியில் தங்கி இருந்த சயான் மற்றும் வயலார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.