சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 புதிய நீதிபதிகளும் இன்று பிற்பகல் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  கூடுதல் நீதிபதிகளாக ஆஷா, நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகிய 7 பேரை  குடியரசுத் தலைவர் நியமனம் செய்து  உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை நீதிமன்றத்திற்கு மொத்தம் 75 நீதிபதி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 56 நீதிபதிகள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது மேலும் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். இதைத்தொடர்ந்த நீதிபதிகளின் எண்ணிக் 64 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளது.