சென்னை:
தமிழகத்தில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள், தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பதாக பாரதியஜனதா கட்சியினர் கூறி வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்று கூறினார். மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எப்படி பயங்கர வாதம் ஒடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் ஒடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி பிரச்சினை போன்ற அதிமுக அரசின் சாதனைகளை திமுகவால் எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள் என்றும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும் என்றும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.