
வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா பாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பனையூர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில், பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அதில், சின்னத்திரை தொடர்களில் நடித்துவரும் பிரபல நடிகையான சங்கீதா பாலன் என்பவரை கைது செய்தனர்
அங்கு மீட்கப்பட்ட வெளிமாநில பெண்கள் நான்கு பேர், மயிலாப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்ட சங்கீதா மற்றும் சதிஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel