தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி வினயரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் நூறாவது நாள் நடந்த போராட்டத்தின் போது  திடீரென வன்முறை வெடித்தது. இதனால் கலவரம் செய்தவர்களை கலைக்க காவல்துறையினர்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

இந்த கலவரத்தின்போது ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர்,தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தீ வைத்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினயரசு என்பவரை கைது செய்துள்ளனர்