சென்னை :

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 135 பேர் போலீஸ் பாதுகாப்புடன் நலமுடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 135 பேர் தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சென்றவர்களில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த திருமண என்ற இளைஞர், காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின்போது கல்லெறிக்கு ஆளாகி உயிரிழந்தார்.

இதையடுத்து, அங்கு சுற்றுலா சென்ற தமிழர்களை பாதுகாக்க கோரி தமிழக முதல்வர் காஷ்மீர் முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். மேலும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை  ஐல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான தொலைபேசி எண்ணையும்அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் காஷ்மீரில்  தஞ்சமடைந்துள்ள 135 தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க  கோரி அதிமுக எம்.பி. வேணு கோபால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தை சேர்ந்த 135 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக உள்துறை அமைச்சம் தெரிவித்து உள்ளது.