சென்னை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் (வயது 74). இவர் சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்தார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவருக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் ஓரளவு நல்ல உடல்நலத்துடன் நடராஜன் இருந்தார்.
இந்நிலையில் இந்த மாதம் 16ஆம் தேதி நுரையீறல் தொற்று காரணமாக நடராஜன் சென்னை தனியார் மருத்துவமனையான குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று விடியற்காலை 1.35 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
நடராஜன் மனைவி சசிகலா தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.