தந்தை பெரியார், நாயக்கர் பிரிவினைவாதி என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரு நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டு அந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, தந்தை பெரியார் குறித்து சர்ச்சை பதிவை ட்விட்டியுள்ளார்.

 

 

“ திராவிடஸ்தான் என்று தனி நாடு கோரி, அப்போதைய ஆங்கிலேயரிடம் கோரினார். ஜின்னாவிடமும் இதே கருத்தை தெரிவித்தார் நாயக்கர்”  என்று  பதிவிட்டிருக்கிறார் சு.சுவாமி.