
சென்னை:
பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சை கருத்தை பதிவிட்ட எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் இன்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக உள்பட தமிழக அரசியல் கட்சியினர் சென்னை அண்ணாசாலையில் இன்று மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தினர். அப்போது ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
. இதற்கிடையில் ஒருசிலர் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சென்னை ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூரில் பூணூல் அறுப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். சுமார் 15 பேர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பூணுல் அறுத்தவர்களின் குறித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதையடுத்து, சென்னை ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதியில் பூணூல் அறுப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]