சென்னை:
தான் பெற்ற மகனையே கள்ளக்காதலன் மூலம் கொலை செய்த கொடுமையான சம்பவம் சென்னையில நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 4ம் வகுப்பு படிக்கும் 10 வயதான ரித்தேஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், மாலை நேரத்தில் இந்தி டியூசன் படிக்க சென்ற மாணவன் ரித்தேஷை காணவில்லை என்று என்று அவனது தந்தை கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் ரித்தேஷ் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, ரித்தேஷ் காணாமல் போனதற்கு, கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் இளைஞர் நாகராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்றும் ரித்தேஷை நாகராஜ் வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவரை தேடியபோது அவர் தலைமறைவானார்.
இதையடுத்து நாகராஜை பிடிக்க வலைவீசிய போலீசார், அவர் தலைமறைவாக இருந்த சேலத்திற்கு சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தி விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அப்போது, கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி வரும் நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதை கண்ட சிறுவன் ரித்தேஷ் தனது தந்தையிடம் கூறியதை தொடர்ந்து, கார்த்திகேயன் அவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகும் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்ந்து தொடர்ந்தால், அதைக்கண்ட ரித்தேஷ் , இதுகுறித்து தனது தந்தையிடம் சொல்லப்போவதாக கூறியதை தொடர்ந்து, சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி மஞ்சுளாவின் ஆலோசனையின் பேரில், நாகராஜ் சிறுவனை டியூஷனுக்கு அழைத்துச்செல்வராக கூறி, பழைய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிக்கு அழைத்துச்சென்று, மதுபாட்டிலால் சிறுவனின் தலையில் அடித்து கொலை செய்ததாகவும் கூறி உள்ளார்.
நாகராஜின் வாக்குமூலத்தை தொடர்ந்து, சிறுவன் ரித்தேஷின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனின் தாயார் மஞ்சுளாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் காரணமாக பெற்ற மகனையே கொலை செய்ய ஏற்பாடு செய்த மஞ்சுளாவை அந்த பகுதி மக்கள், இவளும் ஒரு பெண்ணா… என வசைபாடி வருகின்றனர்.