சென்னை:
திருமணப் பதிவுக்கு மருத்துவ சான்றிதழை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மணமக்களின் திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அத்துடன் மருத்துவ சான்றிதழும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று வெற்றிகொண்டான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.