டில்லி:
முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் செயலாளராக பணியாற்றி வந்த டிஎஸ்ஆர் கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமானார். இதை ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது டுவிட்டர் பதிவில், சுப்பிரமணியன் இழப்பு தங்களுக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது.
சுப்பிரமணியன் மறைவை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் உறுதி செய்து தனது டுவிட்டர் பதிவில், சுப்பிரமணியன் ஒரு விவேகமான மற்றும் ஆற்றல் மிக்க நபர் என்றும், தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பவர் என்றும் புகழாரம் சூட்டி உள்ளார்,
மறைந்த சுப்பிரமணியனின் உடல் இன்று பிற்பகல் 5.30மணி அளவில் அவரது இல்லம் அமைந்துள்ள லோதி ரோட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.