07.11.1954ல் பிறந்த கமலஹாசன், கல்வியில் கவனம் செலுத்தாமல் கேள்வியில் (ஞானம்) செலுத்தி மாபெரும் வெற்றியையும், புகழையும் குவித்துள்ளதற்கு காரணம் இவரின் விதி எண் 1 தான்.
பிறந்த எண் 7 ஆனது அவ்வப்பொழுது குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பினும் விதி எண் 1 எல்லா வகையிலும் ஏற்றம் தரும் என்பதில் ஆச்சர்யமில்லை. பட்டறிவாளர்களே உலகில் அதிகம் வெற்றிகளை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தான் உள்ளார் இவர்.
இவரின் தொடர் வெற்றிக்கு காரணம் 1,2,7 ம் எண் தான்.
முதல் படமான களத்தூர் கண்ணம்மா இதன் (kalathur kannamma) இதன் கூட்டு எண் 4+7
2 131 4 5 6 2 21 5 51 44 1
=11, 1+1+2 ம் எண், வெளியான ஆண்டு 1960 + 1+9+6+0+16, 1+6+7ம் எண், கமலஹாசன் வெளி உலகத்திற்கு தந்து அரங்கேற்றம் வெளியான ஆண்டு 1973 + 1+9+7+3+20 2+0+(2) ம் எண் இவரின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்த படம் 16 வயதினிலே 1+6=7 ம் எண் ஆகும்.
இப்படி இவரை பின்னிப் பிணைந்து கொண்டே இருக்கும் இந்த எண்கள் வெற்றிகளையும், மன உறுதியையும் சரியான தருணம் வரும் பொழுது வாரி வழங்கும் என்பதில் ஐயமில்லை.
மற்றவர்களை விட தனது மாறுதலான எண்ணத்தின் வெளிப்பாடுகளை தனது மன்ற உறுப்பினர்களுக்கு ஆணையிட்டு வந்த இவரை பலரும் கேலியாக பேசப்பட்டாலும், உறுப்பினர்கள் ஜாலியாக எடுத்துக் கொண்டு இவர் பின்னால் தொடர்ந்து பயணப்பட்டனர்.
இப்பொழுது காலம் கனிய துவங்கி விட்டது. கமலின் 07.11.1954 =28, 2+8=1 கூட்டு எண் ஆனது அனாவசிய பயத்தை குறைத்து விடும். இதனால் எதையும் தைரியமாக வெளிப்பாடு செய்யும் திறன் இவருக்கு எப்பொழுதும் உண்டு.
இமேஜ் என்ற கனமான போர்வைக்குள் சினிமா இருந்த காலக்கட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கோவணத்துடன் தோன்றி தனது புகழை தக்கவைத்துக் கொண்டார்.
நவம்பர் மாதம் பிறந்த சர்.சி.வி. ராமன், இந்திராகாந்தி, ஜவர்கர்லால் நேரு, ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், விராட் கோலி, அனுஷ்கா ஷெட்டி போல் கமலும் இந்த மாதத்தில்தான் பிறந்துள்ளார்.. இதானால்தான் எவ்வளவோ இந்திய தலைவர்கள் இருந்தும் 16.08.1968 ல் பிறந்த அர்விந்த் கெஜ்ரிவால் முதன்மை விருந்தினராக மதுரைக்கு அழைக்கப்பட்டார்.
கமலஹாசன் கட்சி ஆரம்பித்த நாள் 21.02.2018 , 2+1+2+2+0+1+8= 16 இதன் கூட்டு எண் 7 ஆகும். முதல் மாநாடு விகிஞிஹிஸிகிமி இதன்கூட்டு எண் 1ம் எண், கமல் கூட்டு எண்ணும் 1 தான் இந்த ஆண்டின் கூட்டு எண் 2+0+1+8=11 இதை கூட்டினால் 2-ம் எண்.
அடுத்த ஆண்டு கமலுக்கு வயது 64 இதன் கூட்டு எண் 6+4=1 ஆகும். எனவே இவரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து கவனித்தால் இவருக்குண்டான 1-ம் எண், 2-ம், 7-ம் இது சம்மந்தப்பட்டே இருக்கும் என்பதை அறியலாம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் 7 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. இதுபோல் சட்டமன்ற தேர்தலில் 25 க்கும் குறையாத இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
மக்கள் மனதை அறிந்து கொண்ட இவர் ஒருநாள் இறைவன் மட்டும்தான் நிரந்தரமானவன், நிச்சயமானவன் என்று ஆன்மீக கடலில் மூழ்கிப் போவார் என்பது நிச்சயம்.