விழுப்புரம்:

விழுப்புரம் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் சிறுவன் கொலை செய்யப்பட்டான். தாய் படுகாயமடைந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே விழுப்புரம் அருகே விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி ஆராயி(வயது 45). கூலிவேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பாண்டியன்(வயது 25), சரத்குமார் (வயது 22), விஜயகுமார் (வயது 19), தமயன்(வயது 8) ஆகிய 4 மகன்கள் இருந்தனர். அஞ்சலட்சுமி (வயது 17) என்ற மகளும், 15 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.

இதில் பாண்டியன், சரத்குமார், விஜயக்குமார் ஆகியோர் பெங்களூரில் கூலிவேலை செய்து வருகின்றனர். அஞ்சலட்சுமி திருப்பூரில் உள்ளார். ஆராயி வெள்ளம் புத்தூரில் இளைய மகள் தனம், மகன் தமயன் ஆகியோருடன் வசித்து வருகிறார். இளைய மகள் 8-ம் வகுப்பும், தமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் ஆராயி, இளைய மகள் தமயன் ஆகியோர் தூங்கினர். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆராயி உள்பட 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். ஆராயி, இளைய மகள் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்ம ஆசாமிகள் அங்கிருந்த தப்பி சென்று விட்டனர்.

இன்று கால நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்கேமடைந்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் இளைய மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் ஆராயி, இளைய மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமயன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயமடைந்த இளைய மகளுக்கு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்துள்ளது. பிறப்புறுப்பில் ஏற்பட்டிருந்த ரத்த கசிவை நிறுத்த 2 தையல் போடப்பட்டுள்ளது. இவர்கள் தலித் குடும்பமாகும். இந்த கிராமத்தில் 65 தலித் குடும்பங்கள் உள்ளது. இங்கு உயர் ஜாதியினரின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘அந்த சிறுமி அரை நிர்வாணத்துடன் இருந்துள்ளார். ஆனால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகவில்லை. இவர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது’’ என்று போலீசார் தெரிவித்தனர்.