சிவகங்கை:
வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்தார்.
சிவங்கையில் சாலையை சரிசெய்யக் கோரி பஸ் நிலையத்தில் வக்கீல்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்சை டிரைவர் செல்வராஜ் ஓட்டிச் சென்றார். அப்போது வக்கீல் ஒருவர் பஸ்சை துரத்திச் சென்று தடுக்க முயன்று மயக்கமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த வக்கீல்கள் பஸ்சை மறித்து டிரைவர் செல்வராஜின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தனர்.
இதில் மயங்கி விழுந்த செல்வராஜை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பணி முடிந்து பரமக்குடியில் உள்ள வீட்டிற்கு வந்த செல்வராஜ் அவமானம் தாங்காமல் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.