சென்னை:

கமல்ஹாசன் அரசியல் பயணத்துக்கு நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ஓர் தலைவனுக்கான முழுத்தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன். திரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.