மதுரை
தன் மீது அதிமுக அமைச்சர்கள் வைக்கும் நியாயமான விமர்சனங்களை சரி செய்ய முயல்வேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தினை கமலஹாசன் மதுரையில் தொடங்கினார். தனது கட்சிக்கொடியையும் நேற்று அறிமுகப் படுத்தினார். அவர் கட்சி தொடங்கியதற்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆளும் அதிமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் கமல் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கமலஹாசன், “ஆளும் அதிமுக அமைச்சர்கள் என் மீது வைக்கும் நியாயமான விமர்சனங்களை நான் சரி செய்ய முயல்வேன். மேலும் முதலில் எங்களிடம் ஊழல் இல்லாத அளவுக்கு நாங்கள் எங்களை பார்த்துக் கொள்வோம்” என உறுதி அளித்துள்ளார். இந்த செய்தி சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்துளனர். அத்துடன் கமல் வருமான வரியை ஒழுங்காக செலுத்துவதால் அவரிடம் இருந்து நியாயமான அரசியலை எதிர்பார்க்கலாம் என்னும் தொனியில் சிலர் பின்னூட்டம் இட்டுள்ளனர்.