சென்னை,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேவராஜன் என்பவர் இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம், ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோரை கடத்தி மிரட்டினார்களா…? என்றும், மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.