சென்னை

திமுக சார்பில் நமது அம்மா நாளிதழ் மற்றும் அம்மா டிவி ஆகியவை பிப்ரவரி 24 அன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நமது எம் ஜி ஆர் நாளிதழ் அதிமுகவின் அதிகார பூர்வ நாளேடாகவும் ஜெயா டிவி அதிமுகவின் தொலைக்காட்சியாகவும் இருந்து வந்தது.    இவை இரண்டும் தற்போது சசிகலா குடும்பத்தினருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.   அதிமுகவில் இருந்து தற்போது சசிகலா அணியினர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அதிமுகவுக்காக புதிய நாளேடு மற்றும் புதிய தொலைக்காட்சி தொடங்க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியும் முடிவு செய்துள்ளனர்.   நடிகரும் தலைமைக்கழக பேச்சாளருமான ஜெயகோவிந்தன் என்பவர் நமது அம்மா என்னும் பெயரில் நாளேடு ஒன்றை நடத்தி வருகிறார்,   அவரிடம் இருந்து அந்த நாளேட்டை வாங்கி கட்சியின் நாளேடாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொலைக்காட்சி உரிமம் ஒன்றை வைத்துள்ளார்.   அவரிடம் இருந்து அந்த உரிமத்தைப் பெற்று கட்சி சார்பில் அம்மா டிவி என்னும் பெயரில் தொலைக்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.    நாளேடு மற்றும் தொலைக்காட்சி இரண்டையும் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.