ழனி

ழனி நகரில் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப் பட்டது அம்மா உணவகம்.    த,மிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகத்தில் மலிவு விலையில் சிற்றுண்டிகளும்,  உணவு வகைகளும் விற்கப்பட்டு வருகின்றன.   தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த அம்மா உணவகம் அமைக்கப் பட்டுள்ளது.

பழனி பேருந்து நிலையத்தில்  அம்மா உணவகம் அமைப்பட்டுள்ளது.   இங்கு இன்று அதிகாலை எரிவாயு சிலண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.   எரிவாயு சிலிண்டரில் வாயு கசிவு இருந்ததால் வெடித்ததாக கூறப்படுகிறது.    அதிகாலையின் இந்த விபத்து நேர்ந்ததால் அப்போது உணவகத்தில் யாரும் இல்லை.   அதனால்  யாருக்கும் அபாயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.