சென்னை
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் மின்சார ரெயிலை நம்பி உள்ளனர். ரெயிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் மக்களுக்கு மேலும் சோதனையாக ’பறக்கும் ரெயில்’ என அழைக்கப்படும் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான ரெயில் சேவை திடீரென முன் அறிவிப்பின்றி நிறுத்தப் பட்டது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் அதை சரி செய்யும் பணியால் இந்த ரெயில் சேவை நிறுத்தப் பட்டது. சரியான தகவல் இல்லாததால் பார்க் டவுன், கடற்கரை உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் மக்கள் வெள்ளம் அலை மோதியது.
இந்தப் பழுது சரி செய்த பின் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த சேவை நிறுத்தப் பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.