சென்னை,

ந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“கந்துவட்டி கொடுமையால் ஏற்கெனவே தமிழ்த்திரையுலகில் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மிக அதிக சம்பளம் என்பது 10 சதவிகிதம்பேர்தான் வாங்குகிறார்கள். ஆகவே நடிகர் சம்பளம் என்பதை பெரிதாகச் சொல்ல முடியாது.

திருட்டு வீசிடிதான் முக்கிய பிரச்சினை. அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும். மக்களும் உணர வேண்டும். யாரோ ஒருவரது பணத்தை நாம் மிகக் குறைவான தொகையில்.. உரிய தொகை அளிக்காமல் பார்க்கிறோம் என்ற உணர்வு வேண்டும்.

எந்த்த தயாரிப்பாளரும் வாங்கும் பணத்துக்கு அதிகமாக பணம் செலுத்துவதாக நினைத்தால் தற்கொலை முடிவுக்குப் போக வேண்டாம். தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள். பேசித் தீர்ப்போம் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.