சென்னை:
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை மடிப்பாக்கம் பகுதியின் தென்பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் வருடத்தைப் போலவே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் வீடுகளிலிருந்து இயன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகிறார்கள்.
பெரியார் நகரில் ஆரம்பித்து வெளி வட்டச் சாலை வரையிலான தெற்குப் பகுதியில் சுமார் மூன்று அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. தரை தளத்தில் இருக்கும் வீடுகள் பெரும்பாலானவற்றில் வெள்ளம் புகுந்துள்ளது
குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை போன்றவற்றை இந்தப் பகுதிகளில் விநியோகிக்க இயலவில்லை. மின்சாரமும் இரவிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் பலர் குறிப்பாக தரை தளத்தில் வசிப்பவர்கள், இயன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு பகுதியில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.