சென்னை,
திமுக ஆட்சியின்போது எய்ட்ஸ் நோய் பரவியதால், இனிமேல் திமுக ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி என்று அழைக்க இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் மரணத்தை நாடி உள்ளனர். தினசரி 10க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருவதால் தமிழக மக்களிடையே பீதி நிலவி வருகிறது.
தமிழக அரசின் அஜாக்கிரதையால்தான் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது டெங்கு ஆட்சி என்றும், டெங்கு ஆட்சி கலைக்கப்பட வேண்டிய ஆட்சி கடந்த சில நாட்களாக செய்தியாளர்களிம் தெரிவித்து வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கைத்தறித்துறை அமைச்சர், எம்ஜிஆர் ஆட்சியின்போது தமிழகத்தில் எய்ட்ஸ் பரவியதால், திமுகவின் ஆட்சி எய்ட்ஸ் ஆட்சி என்று அழைக்க இருப்பதாக கூறினார்.
நேற்று, தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தையும், புதிய அகிம்சா பட்டு விற்பனை யையும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சமீப காலமாக ஸ்டாலின் தமிழக அரசை டெங்கு அரசு என்று குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சி செய்தபோதுதான் எய்ட்ஸ் நோய் பரவியது. அதனால் இனிமேல் திமுக ஆட்சியை பற்றி கூறும்போது எய்ட்ஸ் ஆட்சி என்று கூறப்போகிறேன் என அதிரடியாக கூறினார்.