திருச்சி,

ன்னும் 10 நாட்களில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றப்போவதாக டிடிவி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார்.

அதிமுகவையும், ஆட்சியையும் பத்து நாட்களில் கைப்பற்றபோவதாக டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று திருச்சி அருகே நடைபெற்ற டிடிவி ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய நாஞ்சில் சம்பத் முதல்வர் எடப்பாடி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த அனைத்து திட்டங்களையும், தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி  நிறைவேற்ற துடிப்பதாக  குற்றம் சாட்டினார்.

இன்னும் 10 நாட்களில்  அதிமுகவையும் , ஆட்சியையும்  கைப்பற்றி விரைவில் பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

மக்கள் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மீதும்வெறுப்புடன் உள்ளனர். இவர்கள் இருவரின் பெயரையும் பெயரரை இனிமேல் யாருக்கும் வைக்கமாட்டார்கள்.

இவ்வாறு நாஞ்சில் சாம்பத் பேசினார்.