
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக மத்திய மாநில அரசுக்களுக்கு எதிராக அரசியல் விஷயங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அடிக்கடி டுவிட்டரிலும் கருத்துக்களை கூறி வருகிறார்.

அவரது டுவிட்டர் கருத்து குறித்து, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‛ஆடம்பரமான முட்டாள் கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக எனக்கு தெரியவந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா சென்ற கமல், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel