“ப்ளூ வேல் சேலன்ஞ்ச்” விளையாடி, சிறுவர்கள், மாணவர்கள் பலர் உயிரிழக்கும் கொடுமை உலகம் முழுதும் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் அந்த மரணங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. கடந்த  இரு நாட்களுக்குள் மதுரையில் விக்னேஷ், புதுவையில் போரா என்ற மாணவர்கள் இந்த விபரீத விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த  அபாயகரமான விளையாட்டில் இருந்து நமது வீட்டு சிறுவர்கள், இளைஞர்களை காக்க, அந்த விளையாட்டின் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி.

வேறு உடனடி தீர்வுகள் தற்போதைக்கு இல்லை.

ஆகவே ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, சிறுவர், இளைஞர் யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும்படியாக  வண்ணம் நடந்து கொண்டாலோ – உடனே  எச்சரிக்கையாகிவிடுங்கள்.

இந்த ப்ளூ வேல் கேமில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு சிறுவருக்கும்  உங்களின் உதவி நிச்சயம் தேவை.

ப்ளூ வேல் கேமின் இந்த கொடூரமான 50 டாஸ்க்குகளை நீங்கள் அறிந்து கொள்வதால், அதை ப்ளூ வேல் கேம் விளையாடுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகவோ அல்லது மறைமுகமான தூண்டுதலாகவோ நினைக்க வேண்டாம்.

மிக முக்கியமாக ப்ளூ வேல் சேலன்ஞ் செய்யச்சொல்லும் கொடூரமான 50 டாஸ்க்குகள் மீது சுவாரசியம் கொள்ள வேண்டாம்.  ஒரு சில  டாஸ்க்குகள் வரை செய்து பார்ப்போம், பிறகு  கைவிட்டுவிடலாம் என்ற முட்டாள்த்தனமான முடிவுக்கும் வந்துவிடாதீர்கள்.

உயிரோடு விளையாடும் ஒரு கொடூர விளையாட்டுக்கு எதிராக நாம் செயல்படப்போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவேளை ப்ளூ வேல் விளையாட்டு மீதான ஆர்வம் கிளம்பினால் இந்த கட்டுரை படிப்பதை நிறுத்திவிடுங்கள்.

டாஸ்க் 01 :

ஒரு பிளேடு எடுத்துக்கொண்டு கையில் “f57” என்று செதுக்கி, அதை ஒளிப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 02 : விடியற்காலை 4.20 மணிக்கு எழுந்துவிட வேண்டும்.  கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்

டாஸ்க் 03 :  ஒரு பிளேடை எடுத்துக்காண்டு கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது. வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை ஒளிப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

டாஸ்க் 04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பவும்.

டாஸ்க் 05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது “YES” என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் – கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)

டாஸ்க் 06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க் இது.

டாஸ்க் 07 : கையில் “f57” என்று செதுக்கி, அதை ஒளிப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 08 : ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் “#i_am_whale” என்று ஸ்டேட்டஸ் டைப் செய்து அனுப்ப  வேண்டும்.

டாஸ்க் 09 : பயத்தை நீங்கள் கடந்துவிட

டாஸ்க் 10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் (மிக உயரமான கூரையாக அது இருப்பது அவசியம்)

11: ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை ஒளிப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.

டாஸ்க் 13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.

டாஸ்க் 14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.

போரா ( புதுவையில் மாண்டவர்)

டாஸ்க் 15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.

டாஸ்க் 16 : தங்களுக்குத் தாங்களே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

டாஸ்க் 17 : உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.

டாஸ்க் 18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.
டாஸ்க் 19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

டாஸ்க் 20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிந்து கொள்வார். .

டாஸ்க் 21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.

டாஸ்க் 22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்

டாஸ்க் 23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க் இது.

டாஸ்க் 24 : மரணிக்க வேண்டுமென்ற தேதி தீர்மானிக்கப்படுகிறது

டாஸ்க் 25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்துவது அவசியம்.

டாஸ்க் 26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் கூறுவார்.  அதை ஏற்க வேண்டும்.

விக்னேஷ் ( மதுரயில் மாண்டவர்)

டாஸ்க் 27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.

டாஸ்க் 28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.

டாஸ்க் 29 : “நான் ஒரு திமிங்கிலம்” என்ற சபதமெடுக்க வேண்டும்.

டாஸ்க் 30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு உடலில் ஒரு இடத்தில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

டாஸ்க் 50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.

இந்த 50 டாஸ்குகளை அறிந்துகொண்டீர்களா.. இதில் ஏதாவது ஒரு டாஸ்கில் உள்ள அறிகுறிகள். அதாவது விடியற்காலையில் தொடர்ந்து எழுவது, உடலில் காயம், தனிமையில் இருத்தல் போன்று தங்கள் குடும்ப சிறுவர்கள் இருந்தால் உடனே எச்சரிக்கையாகி, அவரை விசாரியுங்கள். அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அந்த ஆபத்தான விளையாட்டில் இருந்து மீட்டு விடுங்கள்.