சென்னை:
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களான வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 18 பேர் இரவு 8.30 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர்.
அங்கு 10 நிமிடம் அனைவரும் தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் நினைவிடத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் டிடிவி தினகரன் பங்கேற்கவில்லை. தனக்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருப்பதாக தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் 23ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் தினகரனுக்கு 20 எம்எல்ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இதில் இரண்டு பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.