சென்னை:

மிழகத்தின் 3 மாவட்டங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதால் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம், கட்சராயன்பாளையத்தில் உள்ள  ஏரியை திமுகவினர் தூர் வாரினர். இந்த ஏரி முதல்வர் எடப்பாடியின் தொகுதியில் உள்ளதால், இந்த பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, இரு கட்சி யினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில்,  ஏரியை இன்று பார்வையிட செல்வதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஏரியை பார்வையிட இன்று காலை விமானம் மூலம் கோவை சென்ற ஸ்டாலின் அங்கிருந்து காரில் சேலம் செல்ல முயன்றார்.

ஆனால், அவரை சேலத்திற்கு செல்ல விடாமல், கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திமுக மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.