சென்னை:

சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மதுசூதனன் பொன்னையன், கே.பிமுனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பன்னீர் பேசுகையில், ‘‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது’’ என்றார்.

[youtube-feed feed=1]