இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் மகேந்திர சிங் தோனி ரைஸிங் புனே கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி, புதிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்புத் தருவேன் என்று கூறினார்.