தற்போதைய தமிழக அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு செயல்படுவது பாஜகவின் ஜனநாயக விரோத செயல் என்று சி.பி.ஐ. கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“அ.இ.அ.தி.மு.க வில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க முயல்வதும் ,அதற்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதும் , அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.
உடனடியாக சட்டப் பேரவை கூட்டத்தை நடத்தி, யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும்.
அத்தகைய கடமையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும். ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது.