சென்னை,

ல்லிக்கட்டு குறித்து ஆபாசமாக பேசிய ‘விலங்கு பெண்மணி’ ராதா ராஜன் ஃபேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

பீட்டா அமைப்பை சேர்ந்த ராதாராஜன் என்பவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து ஆபாசமாக விமர்சனம்  செய்ததால், தமிழர்கள் மட்டுமல்லாது உலக மக்களிடையேயையும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்.

இவரது பேஸ்புக் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,  லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு,  தனித் தமிழ்நாடு வேணும் கேட்டா கண்டிப்பா 25,000 பேர் வருவாங்க,  ப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க என ஆபாசமாக கூறியிருந்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்யனுமோ அதை செய்வோம் என்று திமிறாக  பேசியிருந்தார்.

இவரது பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் தீயாக பரவி தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து அவரத பேஸ்புக் முடக்கப்பட்டது.

இதுகுறித்து, அவர் நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்தார்.

அதில், ஃபேஸ் புக் அக்கவுண்டை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முடக்கியதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதாராஜன் கூறியுள்ளார்.