கத்திச்சண்டை பட இயக்குநர் சுராஜ், தொ.கா. பேட்டி ஒன்றில், “”நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் முழுவதும் போர்த்திக் கொண்டு நடிக்க விட முடியுமா? என் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர, ஹீரோயினுக்கு முட்டிக்கு கீழ் உடையை வடிவமைத்தால் அதை நான் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். இது பற்றி ஹீரோயின் சங்கடப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.
ஏனென்றால் கீழ்த்தட்டு ரசிகர்கள் அதிக பணம் செலவளித்து படம் பார்க்க வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஹீரோயின்கள் கவர்ச்சியாக உடையணிய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆகவே அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில்தான் என் படத்தில் நடிகைகளை கவர்ச்சியாக காட்டுகிறேன். படத்தை பார்க்க வரும் ரசிகர்களும் அதையே விரும்புகிறார்கள் என்றும் கூறி இருந்தார்.
இது நடிகைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சுராஜூக்கு, நயன்தாரா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர், “சுராஜ், நடிகைகளை பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு ரசிகரும் சுராஜை போன்ற எண்ணத்துடன் திரைப்படங்களை பார்க்க வருவதில்லை. ரசிகர்கள் பெண்களை மதிப்பவர்களாகவே உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகைகளை பணத்திற்காக ஆடை அவிழ்ப்பவர்கள் அல்ல. இப்படி கேவலமாக சித்தரிப்பதை சுராஜ் நிறுத்த சுரவேண்டும்” என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.