
விஜய் நடித்த புலி படத்தை அவரது மேனேஜர் பி.டி. செல்வகுமாரும், ஷிபுவும் இணைந்து தயாரித்தனர். படம் துவக்கப்பட்டது முதல் ரிலீஸ் ஆகும்வரை அவ்வப்போது, “அடுத்தபடத்தையும் சேர்ந்து தயாரிப்போம்” என்றனர்.
ஆனால் இப்போது செல்வகுமார் தனியாக போக்கிரி என்ற படத்தை தயாரிக்கிறார். விக்ரம் நடிக்கும் புது படத்தை தனியாக ஷிபு தயாரிக்கிறார்.
“புலி படம் தோல்வி அடைந்ததில் ஏகப்பட்ட நஷ்டம். அதனால் ஏற்பட்ட பணப்பிரச்சினையில் இருவரும் பிரிந்துவிட்டார்கள்” என்கிறார்கள் இண்ட்ஸ்ட்ரியில்.
வெற்றிக்கு பலர் சொந்தம் கொண்டாடுவார்கள், தோல்வி என்பது அநாதைப்பிள்ளை என்று தெரியாமலா சொன்னார்கள்!
Patrikai.com official YouTube Channel