vijaysethupathi-arunkumar-marriage
விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் திருப்பங்களை கொடுத்த படங்களில் “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி” ஆகிய படங்கள் வரிசையில் இருக்கும். அந்த அளவுக்கு சேதுபதியை பயன்படுத்தி நல்ல படத்தை கொடுத்த இயக்குனர் அருண்குமாருக்கு நேற்று திருமணம் நடந்தது.
மேலே கூறிய இரண்டு படங்களிலும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த தீபிகா என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார் அருண், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மதுரையில் நடந்த இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,. இந்நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் இன்னொரு படத்தையும் அருண்குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.