ரியோடிஜெனிரோ :
தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின் மரினை எதிர்கொண்டு விளையாடினார்.
போட்டி மிகக்கடுமையாக இருந்தது. கடைசி செட்டில் ஸ்பெயினின் கரோலினா மரின் சிந்துவை தோற்கடித்து தங்கம் வென்றார். இரண்டாவது பரிசான வெள்ளிப் பதக்கம் சிந்துவுக்கு கிடைத்தது.
இரண்டாவது செட் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் மரினின் ஆட்டம் கடுமையாக இருந்தது. சிறப்பாக ஆடி, சிந்துவின் பந்துகளை விளாசினார். சிந்துவும் மரினின் பந்துக்கு பதிலடி கொடுத்து கடுமையாக போராடினார்.
சரியாக 7.35 மணிக்கு போட்டி ஆரம்பம் ஆனது. முதல் செட்டின் முதல் சர்விசை சிந்து ஆரம்பித்தார். இரவு 8 மணிக்கு முதல் செட் முடிவு பெற்றது. முதல் செட்டில் சிந்து வெற்றி பெற்றார்.
இரண்டாவது செட்டு 8.05 மணிக்கு ஆரம்பமானது. ஆரம்பத்தில் இருந்தே ஸ்பெயின் வீராங்கனை முன்னணியில் இருந்து வருகிறார். 8.26 மணி நிலவரப்படி சிந்து 12 பாய்ண்டும் மரின் 21 பாய்ண்டும் பெற்று விளையாடி வருகிறார்கள். போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது செட் மரின் வெற்றி பெற்றார்.
மூன்றாவது சுற்று (இறுதி சுற்று) இரவு 8.31 மணிக்கு ஆரம்பமானது. 8.58 மணி நிலவரப்படி சிந்து 15 பாய்ண்டும் மரின் 21 பாய்ண்டும் பெற்று விளையாடி வருகிறார்கள். போட்டி கடுமையாக உள்ளது. ஆனால் 3வது செட்டில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை பிவி சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஓகுராவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் காரணமாக இந்தியாவுக்கு பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் கிடைப்பது உறுதியானது.
இதுகுறித்து, பிரேசிலை சேர்ந்த் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, “ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்கு – கனவு” இறுதி போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 21ந்தேதியுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.