இந்தியாவுக்கு 2வது பதக்கம்! முதல் வெள்ளி – சிந்து பெற்றார்!!

Must read

ரியோடிஜெனிரோ :
இன்று  நடைபெற்ற  ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின் மரின் முதல்பரிசான தங்கத்தை தட்டிச் சென்றார்.

Jpeg
Jpeg

போட்டி மிகக்கடுமையாக இருந்தது.  கடைசி செட்டில் ஸ்பெயினின் கரோலினா மரின் சிந்துவை தோற்கடித்து தங்கம் வென்றார். இரண்டாவது பரிசான வெள்ளிப் பதக்கம் சிந்துவுக்கு கிடைத்தது.
இரண்டாவது செட் ஆரம்பத்தில் இருந்தே  ஆட்டம்  மரினின்  கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மரின்  சிறப்பாக ஆடி, சிந்துவின் பந்துகளை விளாசினார். சிந்துவும் மரினின் பந்துக்கு பதிலடி கொடுத்து கடுமையாக போராடினார்.
Jpeg
Jpeg

சரியாக  7.35 மணிக்கு ஆரம்பம் ஆன போட்டி இரவு 8.58 மணிக்கு முடிவு பெற்றது.
முதல் செட்டின் முதல்  சர்விசை ஆரம்பித்த சிந்து  அருமையாக விளையாடி 21-19  முதல் செட்டை தன் வசமாக்கினார்.
இரண்டாவது செட்டு 8.05 மணிக்கு  ஆரம்பமானது. ஆனால் சிந்துவின் ஆட்டத்தைக் கண்டு சுதாரித்துகொண்ட மரின்,   ஆரம்பத்தில்  இருந்தே சிந்துவின் பந்துகளை விளாசி தள்ளினார்.   போட்டி கடுமையாக  நடைபெற்றது  இறுதியில்  இரண்டாவது செட்டில்  21-12 பாய்ண்டில் மரின் வெற்றி பெற்றார்.
Jpeg
Jpeg

இதையடுத்து மூன்றாவது சுற்றான இறுதிச் சுற்று ஆரம்பமானது. முதலில் இருந்தே மரின் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இதன் காரணமாக ஆட்டம் மரினின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது. இறுதியில் மரின் 21-15 பாய்ண்ட் கணக்கில் இந்திய வீராங்கனை சிந்துவை வீழ்த்தினார்.
இரண்டு செட்டில் ஸ்பெயின் வீராங்கனை வெற்றி பெற்றதால் முதல் பரிசான தங்கப்பதக்கம் அவருக்கு கிடைத்தது. இரண்டாவது பரிசான வெள்ளிப் பதக்கம் இந்தியாவின் சிந்துக்கு கிடைத்தது.
இந்தியாவுக்கு இது இரண்டாவது பதக்கம் ஆகும். ஏற்கனவே மல்யுத்த போட்டியில் மாலிக் வெண்கலம்  பதக்கம் பெற்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் சேர்த்தார். அதையடுத்து சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
P_20160819_212019
நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை பிவி சிந்து  21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஓகுராவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் காரணமாக  இந்தியாவுக்கு பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் கிடைப்பது உறுதியானது. அதன்படி வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதுகுறித்து, பிரேசிலை சேர்ந்த்  செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்குகனவு இறுதி போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 21ந்தேதியுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.
medal
இதுவரை நடைபெற்ற போட்டியில் இந்தியா இரண்டே  இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்று பதக்கப் பட்டியலில்  61 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article