சூடு வைத்த ஆட்டோ மீட்டர் மாதிரி, ஹீரோக்கள்தான் படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றி வந்தார்கள். ஹீரோயின்களின் சம்பளம் அத்தனை சீக்கிரம் உயராது. ஆனால் இப்போது அவர்களும், அதே பாலிசியை கடைபிடிக்க ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை நயனும் அனுஷ்காவும்தான் டாப். படத்துக்கு இரண்டரை கோடி வரை வாங்குகிறார்கள். “இரண்டு கோடியே போதும்” என்ற தாராள மனதுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார் தமன்னா.
அது சரி.. இந்திய இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் யார் தெரியுமா?
கங்கனா ரணாவத்! இவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ. 12 கோடி!
“ஹூம்.. இத்தனை சம்பாதிச்சும் என்ன கங்கனா.. ஒரு நல்ல ட்ரஸ் போட்டுக்க முடியலையே என்று நினைக்கிறீர்களா..?
நீங்கள் ஞானி!
Patrikai.com official YouTube Channel

