சென்னை: கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் படுதோல்வி அடைவார் என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வை ஆதரித்து வந்த அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு ஐந்தாவது இடம்தான் கிடைக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
கடலூர் தொகுதி நிலவரம் என்று தந்தி டிவி கூறியிருக்கும் கருத்துக்கணிப்பு வருமாறு:
அதிமுக 31 – 37% திமுக 27 – 33% பாமக 10 – 16 % தமாகா 11 -17 % நாம் தமிழர் 4 – 10 % பிற கட்சிகள் 1% நோட்டா 1%