தொழிற்துறை பின்னடைவிற்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் ரகுராம் ராஜன் தான் எனவே அவரை ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவரும் ராஜ்யசபை நியமன உறுப்பினருமான சுப்ரமனியன் சாமி தெரிவித்துள்ளார்.
என்னுடைய கருத்துப்படி இந்த ஆளுநர் இந்தியாவிற்கு தகுதியான நபர் கிடையாது. அவரைப் பற்றி பேசவே நான் விரும்ப வில்லை.  அவர் விலைவாசியை கட்டுப்படுத்துகின்றேன் என்று கடன்வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டார். அவரை எவ்வளவு சீக்கிரம் சிகாகோவிற்கே திரும்ப அனுப்பமுடியுமோ அவ்வளவு நாட்டிற்கு நல்லது” என்று பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
இண்டியன் எக்ஷ்பிரஸ் நிறுவனர் 25வது நினைவு விழாவினை ஒட்டி ஏற்பாடு செய்த தொடர்-விரிவுரை நிகழ்ச்சியில்  ரகுராம் ராஜன்ஆற்றிய உரை: மிகவும் கடினமான விசயங்களை எவ்வளவு எளிமையாக விளக்குகின்றார் என்பதைப் பாருங்கள்….