புது தில்லியில் உள்ள சப்தார்ஜுங் மருத்துவமனை மருத்துவரான கே.பி. மாத்தூர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தினமும் மாலையில் பிரதமர் இந்திராகாந்தியை பரிசோதித்து வந்தவர். இவரது பாரிவையில் இந்திரா, சோனியா மற்றும் மேனகா இடையேயான உறவைப் பற்றி “பார்த்திராத இந்திரா “எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இவர் பிரபலங்களான வீ.கே.கிருஷ்ண மேனன், டாக்டர். ராதாகிருஷ்ணன், கீ.பி.பன்ட், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு மருத்துவராய் இருந்துள்ளார். இந்திரா பிரதமர் ஆனவுடன் அவருக்கு மருத்துவர் தேவைப்பட்ட போது அவ்பருக்கு அறிமுகமானவர் கே.பி. மாத்தூர். அரசியல் பார்வையில் பலரால் சொல்லப்படும் இந்திராவின் கதையை, ஒரு மருத்துவரின் பார்வையில் இந்திரா என்று மிக நகைச்சுவையுடனும் சுவாரசியத்துடனும்  எழுதியுள்ளார்.

 



 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

அந்த புத்தகத்தில் , சஞ்ஜய் இறந்த இரண்டாண்டுகளுக்குள் மேனகா வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.  ராஜீவ் அதிருப்தியாளர்களுடனான அவரது நெருக்கம், சஞ்ஜை விச்சார் மன்ச்” எனும் அமைப்பை உருவாகவும் காரணமாக அமைந்தது.
ராஜீவ் திருமணதிற்கு பிறகு வெகுவிரைவில் சோனியா இந்திராவின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனார். சோனியா இந்தீராவிற்கு அளித்த மரியாதை இந்திராவை வெகுவாய் கவர்ந்தது. அதனால்  சோனியாவின் கைக்கு வீட்டு மேலாண்மை  சீக்கிரமே வந்தது.

பொதுவாய் ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் புத்தகப்புழுவான இந்திரா காந்தி பெரும்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரும்பிப் படிப்பார். மேலும், உடல், மனம் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை விரும்பிபடிப்பார்.
குறுக்குவெட்டு புதிர்களை தீர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
சில நாட்கள் மதிய உணவிற்குப் பிறகு அவர் சீட்டு விளையாடுவார். அவருக்கு பிடித்த ஆட்டம்” காளி மேம்”.

  • 1966 ஆண்டில் அவர் பிரதமரான முதல் இரண்டாண்டுகளுக்கு அவர் பதட்டம், குழப்பம் மற்றும் தன்னம்பிக்கையின்றி இருந்தார். அதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். பாராளுமன்றம் அல்லது வெளியில் பேச வேண்டும் என்றாலே அவருக்கு பதட்டம் அதிகமாகி விடும். அதனாலே பேசுவதை தவிர்த்துவிடுவார்.
  • எனினும் இந்திரா மிகவும் அழுத்தம் வாய்ந்தவர். ஹிந்தி எதிர்ப்பு வழுத்திருந்த சமயத்தில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் , மாணவர்கள் ஹிந்தி ஒழிக என்று கோஷமிட்டது கண்டு அஞ்சாது, ஹிந்தி ஒழிக என்றுக் கூறாதீர்கள், தமிழ் வாழ்க என்று கூறுங்கள். நான் தமிழ் கற்றுக்கொள்கின்றேன், நீங்களும் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
  • சிரிக்கும் புத்தா எனும் நிலத்திற்கு கீழ் அனு வெடிப்பு சோதனை போக்ரானில் நிகழ்த்தப் பட்ட மே 18 ,1974 சில நாட்களுக்கு முன்பிருந்தே மிகுந்த குழப்பத்துடன் பதட்டத்துடனும் இந்திரா காணப்பட்டார். அந்த சமயத்தில் அவர் காயத்ரி ஜெபம் காகிதத்தில் எழுதிக் கொண்டிருந்தார். மருத்துவரிடம் சரியாகப் பேசவில்லை.
  • எமர்ஜென்சி பிரகடனம் குறித்தும் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
  • சஞ்ஜய் காந்தியின் செய்கை மக்களிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்துவதை அவர் ஒரு சமயத்தில் உணர்ந்தார். ஆனால், அவரால் எந்த ந்டவடிக்கையையும் எடுக்கமுடியவில்லை. தன் இளைய மகன் மீதான அபரிமிதமான அன்பு அவர் கைகளை கட்டிப்போட்டுவிட்டது.




 


 
1977 தேர்தல் தோல்விக்கு பிறகு, அவர் பீஹாரில் உள்ள குக்கிராமமான பெல்சிக்கு விஜயம் செய்ய விரும்பினார். பெல்சியில், உயர் சாதி நில உரிமையாளர்கள் தலித் கூலித்தொழிலாளர்களை நிலத்தகராறில் படுகொலை செய்திருந்தனர். கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. எனினும் தன் விடாமுயற்சி மற்றும் துணிச்சல் காரணமாக கும்மிருட்டில் ஒரு யானையில் பெல்கி சென்றடைந்தார்.
இந்த புத்தகத்திற்கு பிரியங்கா காந்தி முன்னுரை எழுதியுள்ளார். அதில் டாக்டர் மாத்தொர் மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளைக் கூட தெளிவாய் புரிந்து கொள்ளக்கூடியவர் என்று குறிப்பிட்டு உள்ளார். மாத்தூர் அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

அக்டோபர் 31 1984 ல் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்