
தமிழக வாழ்வுரிமை கட்சி்யின் தலைவர் தி.வேல்முருகன், கட்சி துவங்கியது முதல் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். அம்மா.. அம்மா.. என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த அவர், கடந்த 13ம் தேதி அன்று போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்தோடு, தங்கள் இரட்டை இலக்க எண்ணில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று அதிமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் வேல்முருகன் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இது அக்கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அதிமுக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel