kapoli

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதுப்படம் பற்றித்தான் எத்தனை யூகச் செய்திகள்!

ரஜினி ரஞ்சித் கலைப்புலி தாணு.. ஆகிய மூவர்தான் தானாக இந்தப் படத்தில் ஃபிக்ஸ் ஆனவவர்கள். மற்றபடி கதை, டைட்டில், ஹீரோயின், லொகேசன் எல்லாம் ஆளாளுக்கு முடிவு செய்து செய்தியாக உலவவிட்டார்கள்.

இப்போது, “ஏவி.எம். ஸ்டூடியோவில் “கபாலி” பட போட்டோ செஷனில் ரஜினி” என்ற குறிப்போடு ஒரு படம் இணையத்தில் உலாவர ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் “கபாலி” பட குழுவினரோ.. “அய்யய்யோ.. கபாலி அல்ல.. போலி! யாரோ மார்பிங் பண்ணி பரவவிட்டிருக்காங்க!” என்று அலறுகிறது.

“படம் ரிலீஸ் ஆகிறவரைக்கும் இந்த மாதிரி ஆட்கள் ரஜினியை மண்டை காய வப்பாங்க. ரிலீஸ் ஆன உடனே விநியோகஸ்தர்கள் மண்ட காய வப்பாங்க! பாவம் ரஜினி!” என்று உச் கொட்டுவதைத் தவிர, நமக்கு வேறு வழியில்லை!

 

[youtube-feed feed=1]