பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளதாக, மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து புதியஅரசு ஓரிரு நாளில் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி, இரண்டரை ஆண்டுகள் முதல்வராக சித்தராமையா ஆட்சி செய்த நிலையில், மீதமுள்ள நாட்கள், டி.கே.சிவகுமார் முதல்வராக பதவி ஏற்று ஆட்சி செய்யப்பட வேண்டும். ஆனால், இரண்டரை ஆண்டுகளை கடந்த சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர்ந்ததால், துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, சித்தராமையாவை ராஜினாமா செய்ய வைத்தது. இதையடுத்து அவர் தனது ராஜினாமாவை கவர்னர் மாளிகையில் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், “கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத் தலைவர்கர் பெங்களூருவில் உள்ள மக்கள் பவனில் இருந்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையை ஆளுநர் உடனடியாகக் கலைத்தார். இருப்பினும், அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை சித்தராமையா முதல்வராகத் தொடர்வார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓரிரு நாளில் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சிபதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]