டெல்லி: பொதுமக்கள் வெளியே செல்லும்போது மறக்காமல் தண்ணீர் எடுத்து செல்லுங்கள், பறவைகள், விலங்களுக்கு தண்ணீர் வையு என பிரதமர் மோடி முக்கிய அறிவுரை வழங்கி உள்ளார்.

நாடு முழுவதும் வெயில் வரலாறு காணாத அளவில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தத் தகிக்கும் கத்தரி வெயில் நம் அனைவருக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், வெளியே செல்லும்போது மறக்காமல் குடிநீரை உடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களை வலியுறுத்தியுள்ளார். அனைவரும் தங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும் மோடி அறிவுறுத்தினார்.
அன்றாட வாழ்வில் வெப்பத்தால் ஏற்படும் அதிகரித்து வரும் சிரமங்களை வலியுறுத்திய திரு மோடி, இதுபோன்ற காலநிலையில், பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்வது ஒரு சிறந்த ஆதரவாக அமைகிறது என்று கூறினார். தாகமாக இருப்பவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர் வழங்குமாறு அவர் பரிந்துரைத்தார். மேலும், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களின் நலனை விசாரிக்க அவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அவர், நிறைய தண்ணீர் குடிக்கவும், கடுமையான மதிய வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தவரை ஓய்வெடுக்கவும் நினைவூட்டினார்.
மேலும், விலங்குகள் மற்றும் பறவைகளைக் கருத்தில் கொண்டு, வீடுகள், பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய பாத்திரத்தை வைக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
யார் வேண்டுமானாலும் குடிப்பதற்காக, தங்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு வெளியே குடங்களில் தண்ணீர் வைப்பவர்களின் முயற்சிகளையும் திரு மோடி பாராட்டினார். இந்த கடினமான நாட்களில் அனைவரும் ஒருவரையொருவர் முழுமையான உணர்வுடனும் கருணையுடனும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]